நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்

ஜாகர்த்தா:

துன் டாக்டர் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து முழுமையாக விளக்கம் தர வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகன்கள் தங்கள் செல்வத்தின் மூலத்தை விளக்க வேண்டும்.

இல்லை என்றால் அரசாங்கத்திற்கு பணத்தை திருப்பித் தர வேண்டும்.

ஜாககர்த்தாவில் இந்தோனேசிய பத்திரிகையாளர் நஜ்வா ஷிஹாப்புக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறினார்.

பாஸ் தலைமையிலான எதிர்க்கட்சி பேரணியில் அவரது தலைமையை கடுமையாக விமர்சித்த டத்தோஸ்ரீ அன்வார்,

அவரது பதவிக் காலத்தில் ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டது உட்பட, விசாரணை நடத்துவதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுவதாகக் கூறினார்.

நான் யாரையும் கண்மூடித்தனமாக குற்றம் சாட்ட விரும்பவில்லை. மாறாக, விசாரணை நடத்துவதை எம்ஏசிசியிடம் விட்டுவிடுவேன்.

ஆனால் யாராவது தங்களிடம் 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மற்றொரு நபரிடம் 4 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்தால் அது குறித்து விளக்க வேண்டும்.

நிதியின் மூலத்தை அவர்களால் விளக்க முடியாவிட்டால், அவர்கள் அதை திருப்பித் தருவது பொருத்தமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset