நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட், செலயாங் வீட்டுப் பிரச்சினைகளில் பிரதமர் தலையிடவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம்: பாதிக்கப்பட்ட மக்கள்

புத்ராஜெயா:

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட், செலயாங் வீட்டுப் பிரச்சினைகளில் பிரதமர் தலையிட வேண்டும்.

இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என்று புத்ராஜெயா பிரதமர் இலாகாவின் முன் கூடிய அப்பகுதி மக்கள் கூறினர்.

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் கடந்த 1956ஆம் ஆண்டு முதல் இந்த குடியிருப்பு பகுதி உள்ளது.

பல தலைமுறைகளைக் கண்ட குடியிருப்பு  இது.

இங்குள்ள வீடுகள் அனைத்திற்கும் முறையான நிலப்பட்டா உள்ளன. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் இங்கு உள்ள 125 வீடுகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைமையேற்ற ஸ்ரீ ரமேஸ் கூறினார்.

இப்பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யவில்லை என்றால் பாராபட்சம் இன்றி உடைக்கப்படும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று செலயாங்கிலும் வீடுகள் உடைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின், ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு உட்பட பலரிடம் மகஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில் தான் இரண்டாவது முறையாக பிரதமர் அலுவலகத்தில் மகஜர் கொடுத்தோம்.

இப்பிரச்சினைக்கு உரிய பதில் தரப்படும் என பிரதமர் இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது எங்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் பிரச்சினைக்கு  தீர்வு வேண்டுமென மலேசிய தமிழர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரி கூறினார்.

இதனிடையே பிரதமரின் நடவடிக்கைக்காக அடுத்த 14 நாட்கள் காத்திருப்போம்.

அப்படி ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நாங்கம் உண்ணாவிரதத்தில் குதிப்போம்.

இதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை என்று ஸ்ரீ ரமேஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset