நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவக்‌ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலை முயற்சி

ஜொகூர்பாரு:தே

வக்‌ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என நம்பப்படுகிறது.

ஜொகூர் மாநில பெண்கள், குடும்பம் சமூக மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் கைரின் நிசா இஸ்மாயில் இதனை கூறினார்.

தனது ஒரே குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட மிகுந்த சோகம், அதிர்ச்சி காரணமாக, அவர் தற்கொலைக்கு முயன்றதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உளவியல் உதவி வழங்க சமூக நலத் துறையின் பிரதிநிதி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவி வழங்க ஜே.கே.எம்.இலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பினோம்,

ஆனால் அவர்கள் இந்த உதவியை மறுத்துவிட்டனர்.

அதே வேளையில் தேவக்‌ஷேனின் தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset