
செய்திகள் மலேசியா
குழந்தைகளை உள்ளடக்கிய மொத்தம் 1,443 ஆபாச உள்ளடக்கங்கள் சமூக வலைத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
குழந்தைகளை உள்ளடக்கிய மொத்தம் 1,443 ஆபாச உள்ளடக்கங்கள் சமூக வலைத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மக்களவையில் இதனை தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை பல்வேறு உள்ளடக்கங்கள் சமூக ஊடக சேவை வழங்குநர்களால் அகற்றப்பட்டது.
தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, கேள்விக்குரிய தள வழங்குநர்களால் நிர்ணயிக்கப்பட்ட சமூக வழிகாட்டுதல்களை மீறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யூடியூப் போன்ற தள வழங்குநர் வழிமுறைகள் பயனர்களுக்கு குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளை பாதிக்கும் ஆபாச உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்குவதைத் தடுக்கும் வகையில் உள்ள விதிமுறைகள் குறித்து தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஜ் முகமட் நவி கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 10:26 pm
கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
July 29, 2025, 10:24 pm
சமய வளர்ச்சியுடன் சமுக சேவையையும் ஆற்றிட வேண்டும்: சுந்தரசேகர் வலியுறுத்து
July 29, 2025, 4:48 pm