நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்‌ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

சிரம்பான்:

கேபளால் கழுத்தை நெரித்ததாலே தேவக்‌ஷேன் மரணமடைத்தார் என பிரேத பரிசோதனையில் அம்பலமாகி உள்ளது.

நெகிரி செம்பிலான் போலிஸ்  தலைவர் டத்தோ அகமது ஜாஃபிர் முகமட் யூசோப் இதனை தெரிவித்தார்.

ஜெம்பூலின் ரொம்பின் அருகே நேற்று தந்தையால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன், கழுத்தில் அழுத்தம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளார்.

ஆறு வயது சிறுவனின் உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் கேபிள் டையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ரெம்பாவ் மருத்துவமனை தடயவியல் பிரிவில் மதியம் 12 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது.

பின்னர் மாலை 4.26 மணியளவில் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகள் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் மரணத்திற்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தின.

இந்த சம்பவத்தில் கேபிள் டையைப் பயன்படுத்தியதால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகிறது.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், விவாகரத்து பெறும் நிலையில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இதுவரை, சந்தேக நபர் நேர்மறையான பதிலை அளிக்கவில்லை.

சம்பவத்திற்கான உண்மையான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset