நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, இந்தோனேசியா இடையிலான வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன: பிரதமர்

ஜாகர்த்தா:

மலேசியா, இந்தோனேசியா இடையிலான வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில்  பல முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஜகார்த்தாவில் 13ஆவது வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எல்லை விவகாரங்கள், பொருளாதார உறவுகள், தூய்மையான எரிசக்தித் திட்டங்களில் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடனான இன்றைய சந்திப்பின் போது,

பூலாவ் செபாடிக்,  சுகாதாரம்,  தகவல், தொடர்பு, இணைய நிர்வாகம் உள்ளிட்ட எல்லைப் பிரச்சினைகளை உள்ளடக்கிய நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக தலைநகர் கோத்தா நுசாந்தராவில் முதலீட்டு வாய்ப்புகள், எல்லை தாண்டிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை நாங்கள் விவாதித்தோம்.

ஜாகர்த்தாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset