நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வேகம் இந்திய சமூகத்தின் மேன்மைக்குக் காட்டியிருக்கலாம்: துளசி மனோகரன் பரபரப்பு அறிக்கை 

ஈப்போ: 

தனது அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வேகம் இந்திய சமூகத்தின் மேன்மைக்குக் காட்டியிருக்கலாம் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

எனது அறிக்கையை சற்று கவனமாக வாசித்தால் அதில் தாம் ம.இ.கா எனும் கட்சியைத் தாக்கி அறிக்கையை வெளியிடவில்லை. மாறாக, சிறந்த முறையில் சேவைகளை மேற்கொள்ள அவர்களுக்கு சவால் விடுத்தேன். 

இதனை ம.இ.கா கட்சியைச் சார்ந்தவர்கள் தவறாக புரிந்து கொண்ட வேளையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது என்று துளசி மனோகரன் கூறினார். 

அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் ம.இ.கா, ஆளும் கட்சியாக செயல்பட வேண்டும். அதை விடுத்து ஒற்றுமை அரசாங்கத்தையும் பிரதமர் அன்வாரையும் குறை சொல்லக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset