
செய்திகள் மலேசியா
சமய வளர்ச்சியுடன் சமுக சேவையையும் ஆற்றிட வேண்டும்: சுந்தரசேகர் வலியுறுத்து
கோலகங்சார்:
சமய வளர்ச்சிக்கு கவனம் செலுத்தி வரும் இந்து சங்க அமைப்புகள் சமுக நல சேவைகளிலும் தங்களின் பங்கினை ஆற்ற வேண்டும்.
பேரா மாநில இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகர் பெருமாள் வலியுறுத்தினார்.
இந்துக்கள் சமய அறிவை பெருவதை அவசியமாக இருந்தாலும் இந்து பெரு மக்கள் எதிர்நோக்கும் சமுக நல விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்து குடும்பங்களில் பலர் பல சமுக பிரச்சனைகள் எதிர்நோக்கி வருகிறார்கள்.
அதனை கவனத்தில் எடுத்து அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
கோலங்கசார் இந்து சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற 47ஆவது திருமுறை ஓதும் விழாவை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.
கோலகங்சார் இந்து சங்க பேரவையின் ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா காந்தி நினைவு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இங்கு ஆண்டு தோறும் சமய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் கோலகங்சார் இந்து சங்க பேரவையை, சுந்தரசேகரர் பெருமாள் வெகுவாக பாராட்டினார்.
இந்த வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளிகளிலும் , ஆலயங்களிலும் சமய வகுப்புகளை நடத்த இந்து சங்கங்கள் தொடர்ந்து முனைப்பு காட்ட வேண்டும் என்று கேடுக்கொண்டார்.
முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய கோலகங்சார் இந்து சங்க தலைவர் பா. நாராயணன், இந்த நிகழ்வு இங்கு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 8:38 am
ஆசிரியர் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவ 14 வயது மாணவன் கைது: போலிஸ்
July 30, 2025, 8:36 am
கார் 80% எரிந்து சாம்பலானது: தலைமை ஆசிரியர் மரணம்
July 29, 2025, 10:26 pm