
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி, மஇகா விவகாரத்தில் துளசி மனோகரன் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை; சிவசுப்பிரமணியம்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணி, மஇகா விவகாரத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை.
மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 பொது தேர்தலுக்குப்பின் எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு துணை நின்றது தேசிய முன்னணி தான்.
அத்தகைய தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் இந்திய சமுதாயம் சார்ந்த ஆதங்கத்தையும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் வெளிப்படுத்தினார்.
இதனால் துளசி மனோகரனுக்கோ அவர் இடம் பெற்றுள்ள ஜசெகவிற்கு என்ன நேர்ந்தது?
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து மஇகா விலக வேண்டும் என்று அநாகரிகமாக பேசுகின்ற அவசியம் துளசி மனோகரனுக்கும் ஜசெகவிற்கும் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கல்வி, பொருளாதார சிக்கல், குறிப்பாக மித்ரா விவகாரம், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன், உயர்கல்வி வாய்ப்பு குறித்த பிரச்சினை, இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையினர் எதிர்கொள்கின்ற தொடர் சிக்கல் குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை குறித்தெல்லாம் துளசி மனோகரனும் ஜசெக'வும் வாய் த் திறப்பதில்லை.
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலிருந்து ஆயிரத்தை சீன சமூகத்திற்கு மாற்றியது யார்? இது பற்றி துளசியும் ஜசெகாவும் மூச்சு விட்டுதுண்டா?
அதைப்போல தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தமிழ் பள்ளிகளுக்காக ஒரு மில்லியன் நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கினார் பிரதமர் நஜீப்; ஜசெக அதிகாரத்திற்கு வந்தவுடன் அது இல்லாமல் போய்விட்டது; மித்ராவிற்கு இவ்வாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது இதுகுறித்து துளசியும் அவர் இடம்பெற்றுள்ள கட்சியும் பேசியது உண்டா?
ஆக மஇகா குறித்தும் மஇகா இடம் பெற்றுள்ள தேசிய முன்னணி சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் பேசவோ தலையிடுவதற்கோ துளசிக்கு கடுகளவும் தகுதி இல்லை என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்வதாக சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 10:26 pm
கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
July 29, 2025, 10:24 pm
சமய வளர்ச்சியுடன் சமுக சேவையையும் ஆற்றிட வேண்டும்: சுந்தரசேகர் வலியுறுத்து
July 29, 2025, 4:48 pm