நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் வீட்டுக் கடன் 1.65 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 84.3 சதவீதமாகும்: லிம் ஹுய் இங்

கோலாலமபூர்:
நாட்டில் வீட்டுக் கடன் மொத்தம் 1.65 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84.3 சதவீதமாகும் துணை நிதியமைச்சர் லிம் ஹுய் இன் இதனை கூறினார்.

2025 மார்ச் மாத இறுதியில் நாட்டின் வீட்டுக் கடன் 1.65 டிரில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84.3 சதவீதத்திற்கு சமமாக உள்ளது.

இருப்பினும், வீட்டு நிதி சொத்துக்களின் மதிப்பு கடனின் அளவை விட அதிகமாக உள்ளது. இது மக்களின் ஒட்டுமொத்த நிதி நிலை இன்னும் வலுவாக இருப்பதைக் குறிக்கிறது.

வீட்டுக் கடனை மிகப் பெரிய வீட்டு நிதி சொத்துக்களுடன் இணைந்து பார்க்க வேண்டும்.

மொத்தமாக வீட்டு நிதி சொத்துக்கள் கடனை விட 2.1 மடங்கு அதிகமாக உள்ளன.

இதனால் வீடுகளுக்கு வலுவான இடையகத்தை வழங்குகிறது என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset