
செய்திகள் மலேசியா
9 அரிய வகை வன விலங்குகளை கடத்த முயன்ற பெண் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டார்
சிப்பாங்:
ஒன்பது அரிய வகை வன விலங்குகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
கோலாலம்பூர்அனைத்துலக விமான நிலையம் வழியாக நேற்று இரவு பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது அரிய வகை வன விலங்குகளை கடத்த ஒரு பெண் மேற்கொண்ட முயற்சி அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.
நேற்று இரவு சுமார் 9.10 மணியளவில் கேஎல்ஐஏ முனையம் 1, ஹேமர்ஹெட் எச்2 பகுதியில் அதன் அதிகாரிகள் நடத்திய வழக்கமான சோதனையில்,
இரவு 9.30 மணிக்கு ஹைதராபாத்திற்கு மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 0198 விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டிருந்த ஒரு பயணியின் பயணப் பெட்டியில் விலங்குகள் இருப்பதைக் கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 36 வயதுடைய உள்ளூர் பெண் என்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
அவர் எடுத்துச் சென்ற பயண பெட்டிகளை மேலும் பரிசோதித்ததில் நான்கு சியாமாங்ஸ், ஒரு மக்காக், நான்கு சர்க்கரை கிளைடர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விலங்குகள் சட்டவிரோத அனைத்துலக வர்த்தகத்திற்காக கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதன் மதிப்பு 127,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 10:26 pm
கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
July 29, 2025, 10:24 pm