நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றுவட்டாரத்தில் குடிநுழைவுத் துறையினர் அதிரடி சோதனை: 171 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றுவட்டாரத்தில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 171 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் பாஸ்ரி ஓத்மான் இதனை தெரிவித்தார்.

நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய ஒரு மணி நேர சோதனை  நடவடிக்கையில் 160 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் 254 உள்ளூர்வாசிகள், 14 வணிக வளாகங்கள் உட்பட 758 நபர்களில் சோதனை செய்யப்பட்டது.

இதில் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில்  171 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இந்தியா, வங்காளதேசம்,  இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

முறையான்ன ஆவணங்கள் இல்லாதது, பாஸ் நிபந்தனைகளை மீறுதல், காலாவதி தேதி வரை தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குடியேற்றச் சட்டம் 1959/63 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

வாடிக்கையாளர்களாகக் காட்டிக் கொண்டு தப்பிக்க முயன்ற வெளிநாட்டினரின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset