நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி படிக்க தடை ஏற்பட்டால் ஆசிரியர்களும், சமூகப் பொறுப்பாளர்களும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

சைபர்ஜெயா:

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி படிக்க தடை ஏற்பட்டால், ஆசிரியர்களும், சமூகப் பொறுப்பாளர்களும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறத்தினார்.

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் ஏற்பாட்டில் மாநில அளவிலான செந்தமிழ் விழா சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

குறிப்பாக இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்.

6 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், இடைநிலைப் பள்ளிக்குச் சென்றதும் அங்கும் தொடர்ந்து தமிழைப் படிக்க வேண்டும் எனும் வேட்கை கொள்ள வேண்டும்.

அதற்குத் தடை இருக்குமாயின் ஆசிரியர்களும், சமூகப் பொறுப்பாளர்களும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

தமிழும் சமயமும் இரண்டு கண்களாக வாழ்வோம். வாழ்க்கை வளமாகும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் சரவணன் கூறினார்.

முன்னதாக சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநர் வீ. செங்குட்டுவன் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset