நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகன் தன் சொந்த தந்தையால் கொல்லப்பட்டான் என்பதை தாயால் நம்ப முடியவில்லை; ஒவ்வொரு நாளும் அவர் அழுகிறாள்: தாத்தா

ரெம்பாவ்:

மகன் தன் சொந்த தந்தையால் கொல்லப்பட்டான் என்பதை தாயால் நம்ப முடியவில்லை.

இதனால் ஒவ்வொரு நாளும் அவர் அழுகிறாள் என்று 6 வயது சிறுவன் தேவக்‌ஷேன் தாத்தா இதனை கூறினார்.

ஜெம்பூலில் தேவக்‌ஷேன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு அவள் இன்னும் சோகமாக உள்ளார்.

குழந்தையின் மரணம் சொந்த தந்தையால் ஏற்பட்டது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.

தேவக்‌ஷேன் மரணம் முழு குடும்பத்திற்கும் அதிர்ச்சியாக உள்ளது.  

அதுவும் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரால் அவரின் மரணம் ஏற்பட்டுள்ளது என்பது  பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும்போது, எங்களுக்கு அனுதாபம் ஏற்படுகிறது.

ஆனால் இன்று அது எங்கள் குடும்பத்திற்கு நடந்தது. சந்தேக நபர் ஒரு வெளியாட் அல்ல.

ஆனால் அவரது சொந்த தந்தை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வது கடினம் என்று அவர் கூறினார்.

இங்குள்ள ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவில், குடும்ப உறுப்பினர்கள் தேவக்‌ஷேன்  பிரேத பரிசோதனைக்காகக் காத்திருந்ததால், அங்கு சூழல் மிகவும் சோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset