
செய்திகள் மலேசியா
தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தத்தில் பிரதமரின் பங்களிப்பை மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு பாராட்டுகிறது: டத்தோ டாக்டர் சைட் ஹுசைன்
கோலாலம்பூர்:
தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பங்களிப்பை மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு பாராட்டுகிறது.
அக்கூட்டமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் சைட் ஹுசைன் டை ஹுஸ்மான் இதனை கூறினார்.
தாய்லாந்து, கம்போடியா இடையே உடனடி, நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அயராத முயற்சிகள், தலைமையின் மூலம் இது நடந்துள்ளது.
தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளிலும் வட்டார செயல்பாடுகள், விநியோகச் சங்கிலிகள், முதலீட்டுத் தடயங்களைக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் மலேசிய முதலாளிகளின் சார்பாக தாய்லாந்து, கம்போடியா எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பிரதமரின் துணிச்சலான இராஜதந்திர தலையீடு, விரைவான தீர்வுக்கு நான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகளாவிய வர்த்தகம் மந்தநிலை, தொடர்ச்சியான அரசியல் பதட்டங்கள், அமெரிக்காவின் வரி கட்டண விகிதங்கள் உட்பட அதிகரித்து வரும் சிக்கலான உலகளாவிய வணிக சூழலுடன் முதலாளிகள் போராடி வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த போர்நிறுத்தம் வரவேற்கத்தக்கது. மிகவும் தேவையான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மேலும் ஆசியானில் மலேசியாவின் சிறந்த வர்த்தக கூட்டாளிகளில் தாய்லாந்து ஒன்றாகும்
இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் 100 பில்லியன் ரிங்கிட்டக் தாண்டியுள்ளது.
பல மலேசிய நிறுவனங்கள் தாய்லாந்து முழுவதும் தொழிற்சாலைகள், தளவாட மையங்கள், சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றன.
கம்போடியா அளவில் சிறியதாக இருந்தாலும், வளர்ந்து வரும் வர்த்தக கூட்டாளியாகும்.
கம்போடியாவில் மலேசியாவின் மொத்த முதலீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் 12.6 பில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளன.
குறிப்பாக கட்டுமானம், வங்கி, விவசாயம், தொலைத்தொடர்பு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு தொடர்கிறது.
எனவே, தாய்லாந்து, கம்போடியாவில் ஏற்படும் எந்தவொரு உறுதியற்ற தன்மையும் வணிக தொடர்ச்சி, விநியோகச் சங்கிலிகள், வட்டார நம்பிக்கைக்கு உண்மையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
ஆனால் பிரதமரின் அதிரடியான நடவடிக்கைகளால் இப்பிரச்சினைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமரின் இம்முயற்சி முதலாளிகளுக்கு பெரும் பயனை அளித்துள்ளது என்று டத்தோ டாக்டர் சைட் ஹுசைன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 10:26 pm
கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
July 29, 2025, 10:24 pm
சமய வளர்ச்சியுடன் சமுக சேவையையும் ஆற்றிட வேண்டும்: சுந்தரசேகர் வலியுறுத்து
July 29, 2025, 4:48 pm