நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கையம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் 3 நாட்களுக்கு நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கையம்மன் ஆலயத்தில்  ஸ்ரீ மகா சண்டி ஹோமம் 3 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

துர்கையம்மன் ஆலயம் என்றாலே அங்கு இந்த சண்டி ஹோமம் மிகவும் பிரசித்திப்  பெற்றதாகும்.

அவ்வகையில் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு பின் இங்கு சண்டி ஹோமம் நடைபெற்றது.

அதன் பின் தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை ஸ்ரீ மகா சண்டி ஹோமம் பத்துமலையில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேவரா பூஜை, எஜமான அனுக்சை, விநாயகர் பூஜை உட்பட பல பூஜைகளுடன் இந்த யாகம் தொடங்கவுள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது பூஜைகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் பூஜைகள் மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானத்திடன் நிறைவுப் பெறும்.

மலேசியாவில் இதுவரை நடந்திராத அளவில் இந்த யாகம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

பல சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த மகா யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து பயன் பெற வேண்டும்.

குறிப்பாக யாகத்திற்கு வரும் பக்தர்கள் ஹோமத்திற்கு தேவையான யாக பொருட்களை உடன் கொண்டு வந்து இப்பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து தரும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset