நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற ஆப்கானிஸ்தான் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்

சிப்பாங்:

போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற நால்வர் அடங்கிய ஆப்கானிஸ்தான் குடும்பத்தினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகளால் நான்கு ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

நாட்டின் நுழைவுப் புள்ளியில் கண்காணிப்பு நடவடிக்கை, ஆவணத் திரையிடலில் சோதனை செய்யப்பட்ட 132 வெளிநாட்டினரில் அவர்களும் அடங்குவர்.

கேஎல்ஐஏ முனையப் பகுதியில் ஒரு ஆண், மூன்று பெண்கள் அடங்கிய நான்கு நபர்கள் இலட்சியமின்றி அலைந்து திரிவதைக் கண்டனர்.

இது கண்காணிப்புப் பிரிவு குழுவின் சந்தேகத்தைத் தூண்டியது.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.20 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இயக்கும் ஏகே 342 விமானம் மூலம் அனைத்து நபர்களும் மலேசியாவிற்கு வந்ததாக விசாரணைகள் கண்டறிந்தன என்று இன்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset