நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் நிறுத்தம்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு அமெரிக்கா நன்றி

கோலாலம்பூர்:

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியதற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

அனைத்து தரப்பினரும் தங்கள் உறுதி மொழிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தாய்லாந்தும் கம்போடியாவும் நேற்று நள்ளிரவு முதல் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டத்தோஶ்ரீ அன்வார் நேற்று அறிவித்தார்.

ஆசியான் தலைவராக டத்தோஶ்ரீ அன்வார், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட்,  தாய்லாந்து பதில் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எட்டப்பட்ட பொதுவான புரிதல்களில் போர் நிறுத்தமும் ஒன்று.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்து, நிலைமைக்கு அமைதியான தீர்வைக் காண தலைவர்களை வலியுறுத்துகிறார்.

இது தொடர்பாக, வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கு தானும் டிரம்பும் உறுதிபூண்டுள்ளது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கம்போடிய மற்றும் தாய் அரசாங்கங்கள் தங்கள் உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரூபியோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset