நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட ஜசெக தலைவர்கள் மஇகாவை குறைக் கூறுவதற்கு தகுதியில்லாதவர்கள்: அர்விந்த்

கோலாலம்பூர்:

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட ஜசெக தலைவர்கள் மஇகாவை குறைக் கூறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஆவர்.

மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார்.

ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் இனியும் புலம்ப வேண்டாம். ஒன்றுப்பட்டு செயல்படுங்கள்.

இல்லையென்றால் வெளியேறுங்கள் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மஇகாவை சாடியுள்ளார்.

இப்படி மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதற்கு முன்பு அவர் முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் குறிப்பாக தேர்தல் காலங்களில் ஜசெக பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

ஆனால் அந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டது. இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டதை அவர் மறந்து விட்டார்.

பிடிபிடிஎன் கடன் ரத்து, பெட்ரோல் விலையை குறைப்போம், 1 மில்லியன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உட்பட பல வாக்குறுதிகளை ஜசெக தலைவர்கள் கொடுத்தனர்.

ஏன் தமிழ்ப்பள்ளி மேம்பாடு, மெட்ரிகுலேசனில் சமமான கல்வி வாய்ப்பு என்றுக் கூட கூறினர். ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை.

இப்படி ஜசெக ஒரு தோல்வி கண்ட கட்சியாகவும் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் கட்சியாகவும் விளங்குகிறது.

ஆனால் மஇகா பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் சமுதாய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஆக மஇகாவை குறை கூறுவதற்கு முன் துளசி போன்ற தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset