நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணி: வெளிநாட்டு முதலீட்டைப் பாதிக்காது: பொருளாதார வல்லுநர்

கோலாலம்பூர்:

அன்வார் எதிர்ப்பு பேரணி ஒருபோதும் வெளிநாட்டு முதலீட்டுகளை பாதிக்காது என்று பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட துருன் அன்வார் பேரணி தலைநகரில் நடைபெற்றது.

இந்த பேரணியால் நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது.

ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களால் எந்தவிதமான சலசலப்பும் அல்லது சொத்துக்களுக்கு சேதமும் இல்லாமல் நிரம்பி வழிந்த இந்த சுமூகமான ஆர்ப்பாட்டம், அரசியல் முதிர்ச்சியை நேரடியாகக் குறிக்கிறது.

மேலும்  இது மலேசியா நிலையான அரசியலைக் கொண்டுள்ளது என்பதற்கான தெளிவான சமிக்ஞையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுப்புகிறது.

ஜனநாயகத்தைக் கொண்டாடுவதில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையையும் இந்தப் பேரணி அடையாளப்படுத்துகிறது.

புத்ரா வணிகப் பள்ளியைச் சேர்ந்த அகமது ரஸ்மான் அப்துல் லத்திப் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset