நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போனதாக நம்பப்படும் 6 வயது சிறுவன்  தேவக்‌ஷேன் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்: தந்தை கைது: போலிஸ்

சிரம்பான்:

காணாமல் போனதாக நம்பப்படும் 6 வயது சிறுவன்  தேவக்‌ஷேன் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

இச்சம்பவம் தொடர்பில் அவனின் தந்தை கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அஹ்மத் ஜாஃபிர் முஹ்ம்மது யூசோப் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள இஸ்கந்தர் புத்தேரியில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் தேவக்‌ஷேன் காணாமல் போனான்.

இந்நிலையில் அச்சிறுவனின் உடல் நேற்று ஜெம்பூல் ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் 36 வயது தந்தையை ஜொகூர் போலிசார் கைது செய்ததைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று மாலை 4.30 மணியளவில் ரொம்பின் பகுதியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஜெம்பூல் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் கடந்த ஜூலை 24 அன்று ஜொகூர் பாருவின் தாமான் புக்கிட் இண்டாவில் ஆறு வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் ஜோகூர் பாருவில் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(ஏ), காணாமல் போன நபர்கள் ஆகிய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவரின் உடல் ஜெம்பூலின் ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடைமுறைக்காக உடல் ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset