
செய்திகள் மலேசியா
அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்தோனேசியா சென்றடைந்தார்
ஜாகர்த்தா:
அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாதுகாப்பாக இந்தோனேசியா சென்றடைந்தார்.
கம்போடியா-தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்து நான்கு மணி நேரத்திற்குள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனேசியாவிற்கு இரண்டு நாள் அலுவல் பயணத்தைத் தொடங்க இன்று இரவு ஜாகர்த்தாவை பாதுகாப்பாக சென்றடைந்தார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.
மேலும் 13ஆவது மலேசியா-இந்தோனேசியா வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஹலிம் பெர்டனகுசுமா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை இந்தோனேசியாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சையத் முஹம்மது ஹஸ்ரின் தெங்கு ஹுசின் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்