நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடனடி போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து, கம்போடியா ஒப்புக் கொண்டன: பிரதமர் அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா:

உடனடி போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து, கம்போடியா நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

போர் நிறுத்தம் குறித்து இன்று புத்ராஜெயாவில் சமாதானத்திற்கான சிறப்புக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்து தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் கலந்து கொண்டனர்.

இதில் சர்ச்சைக்குரிய எல்லையில் பதற்றங்களைத் தணிக்க உடனடியாக நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அமல்படுத்த தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார்.

மேலும் ஆசியானின் தற்போதைய தலைவராக, போர்நிறுத்தத்தை சரிபார்த்து செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒரு பார்வையாளர் குழுவை ஒருங்கிணைக்க மலேசியா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset