நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு கூறுகளுடன் திவேட் கல்வித் திட்டத்தை வலுப்படுத்த மனிதவள அமைச்சு இலக்கு: ஸ்டீவன் சிம்

ஜார்ஜ்டவுன்:

செயற்கை நுண்ணறிவு கூறுகளுடன் திவேட் கல்வித் திட்டத்தை வலுப்படுத்த மனிதவள அமைச்சு இலக்கு கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

மனிதவள அமைச்சு  தற்போதைய எதிர்கால வேலை சந்தையின் தேவைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களை தயார்படுத்தும் முயற்சியில் உள்ளது.

இதன் அடிப்படையில் திவேட் கல்வித் திட்டத்தின் மூலம் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது.

மேலும் தொழில்துறை புரட்சி 4.0இன் தேவைகளுக்கு ஏற்ப இது மேற்கொள்ளப்படும்.

அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ள தொழில்நுட்ப திவேட் நிறுவனங்களில் திறன் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை செயற்கை நுண்ணறிவு கூறுகளைச் சேர்க்க மதிப்பாய்வு செய்வதும் இதில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் குறைந்தபட்சம் அடிப்படை திறன்களைச் சேர்க்க தற்போதுள்ள பாடத் திட்டத்தைப் பார்ப்போம்.

குறிப்பாக பயிற்சியாளர்கள் பட்டம் பெறும்போது அவர்கள் தொழில்நுட்பத் துறையில் நேரடியாக வேலை செய்யாவிட்டாலும், வேலை வாய்ப்பு.  வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

இதன் மூலம்  அவர்களுக்கு குறைந்தபட்சம் அடிப்படை ஆற்றல் இருக்கும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.

ஜார்ஜ் டவுனின் நடந்த 52ஆவது ஆசிய வட்டார பயிற்சி, மேம்பாட்டு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவுக்கும் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset