
செய்திகள் மலேசியா
மலேசியாவின் பாரம்பரிய விளையாட்டுடன் ஏபிசி பாலர் பள்ளியின் வருடாந்திர போட்டிகள் நடைபெற்றது: நோர்ஃபாசிலா
கோலாலம்பூர்:
மலேசியாவின் பாரம்பரிய விளையாட்டுடன் ஏபிசி பாலர் பள்ளியின் வருடாந்திர போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஏபிசி எனப்படும் அட்வான்ஸ் ப்ரில்லியண்ட் பிள்ளைகள் கல்விக் குழுமத்தின் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரியான நோர்ஃபாசிலா பிந்தி கேஎம் அமீர் சுல்தான் இதனை கூறினார்.
ஏபிசி பாலர் பள்ளியின் விளையாட்டு போட்டி தலைநகரில் உள்ள சௌத் சிட்டி பேரங்காடியில் நடைபெற்றது.
வழங்கமாக விளையாட்டு போட்டிகள் திடல் அல்லது அரங்குகளில் நடத்தப்படும். ஆனால் முதல் முறையாக நாங்கள் பேரங்காடியில் இபோட்டியை நடத்தினோம்.
தற்போது நாடு புகைமூட்டப் பிரச்சினை எதிர்நோக்கியுள்ளது. இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் பேரங்காடியில் போட்டி நடத்தப்பட்டது.
குறிப்பாக இப் போட்டி மலேசியாவின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் நடத்தப்பட்டது. தற்போதைய பிள்ளைகள் கைத்தொலைபேசியில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனால் நமது பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வகையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக இவ்விளையாட்டு போட்டியை இந்தியாவின் சேது தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தோற்றுநர் ஹாஜி முகமத் ஜாலில் தொடக்கி வைத்தார்.
அதே வேளையில் ஷேக் ஜமீல் அஹ்மத், டாக்டர் முகமத் காசிம், டத்தோ இப்ராஹிம் ஷா, டத்தோ அப்துல் ஹக்கிம், டத்தோஶ்ரீ ஹாஜி முஹம்மத் காசிம் அலியா, டத்தோ ஃபார்டுல் இட்ரிஸ், முகமத் இப்ராஹிம், பேராசிரியர் டாக்டர் நிஷாம் உட்பட பலர் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்