
செய்திகள் மலேசியா
தாய்லாந்து, கம்போடியா மோதல் குறித்து விவாதிக்கும் சிறப்பு கூட்டம்: புத்ராஜெயாவில் தொடங்கியது
கோலாலம்பூர்:
தாய்லாந்து, கம்போடியா மோதல் குறித்து விவாதிக்கும் சிறப்பு கூட்டம் புத்ராஜெயாவில் தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினையில் தாய்லாந்து, கம்போடியாவை உள்ளடக்கிய சிறப்பு கூட்டத்திற்கு மலேசியா மத்தியஸ்தராக உள்ளது.
இதன் அடிப்படையில் இக்கூட்டம் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு புத்ராஜெயாவில் தொடங்கியது.
இந்த சந்திப்பில் கம்போடிய பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசியான் தலைவராகவும் சாட்சியாகவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த அமர்வில் அமெரிக்க தூதர் எட்கார்ட் டி ககன், மலேசியாவுக்கான சீன தூதர் ஓயாங் யூஜிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்