
செய்திகள் மலேசியா
திருட்டு சம்பவம் தொடர்பில் துன் மகாதீர் பேத்தியின் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்படும்: போலிஸ்
கோலாலம்பூர்:
திருட்டு சம்பவம் தொடர்பில் துன் மகாதீர் பேத்தியின் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி பதிவுகளை போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோலாலம்பூர் இடைக்கால போலிஸ் தலைவர் முகமது யூசுப் ஜான் முகமது இதனை கூறினார்.
தலைநகர் புக்கிட் லெடாங்கில் உள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் பேத்தியின் வீட்டில் கடந்த புதன்கிழமை சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை போலிசார் ஆய்வு செய்து வருகிறது.
வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் 24 மணி நேர காட்சிகளை மட்டுமே சேமித்து வைப்பதால் விசாரணைக்கு உதவ முடியாது.
மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி 1990 களில் நிறுவப்பட்டதாகவும், காட்சிகளை சேமிக்க குறைந்த இடமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்