
செய்திகள் மலேசியா
மரணமடைந்தவர் செய்த தவறு என்ன?: துன் மகாதீர் கேள்வி
கோலாலம்பூர்:
மரணமடைந்த துன் டாய்ம் ஜைனுடின் சொத்தை பறிமுதல் செய்யும் முயற்சி குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்பினார்.
துன் டாய்ம் அரசியலில் சேருவதற்கு முன்பு பணக்காரராக இருந்தார்.
குறிப்பாக அவர் வெளிநாடுகளில் வணிகம் செய்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் சலுகைகள் பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
பிரதமரால் மட்டுமே சந்தேகிக்கப்பட்டால், சொத்துக்களை பறிமுதல் செய்வது சாத்தியமில்லை. அது சட்டத்தின் அடிப்படையில் தவறாக இருக்க வேண்டும்.
பறிமுதல் செய்வது திருடுவதற்கு சமம் என்று துன் மகாதிர் கூறினார்.
துன் டாய்ம் இல்லாதபோது, தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியாத போதும் பறிமுதல் முயற்சி மேற்கொள்ளப்படுவது அநாகரீகமாகும் என்று துன் மகாதீர் கூறினார்.
முன்னதாக ஜூன் 25 அன்று துன் டாய்ம், அவரது மனைவி, அவர்களின் பிரதிநிதிகள் மெனாரா இல்ஹாம் உட்பட பல சொத்துக்களை பறிமுதல் செய்ய எம்ஏசிசி நீதிமன்ற விண்ணப்பங்களைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்