
செய்திகள் மலேசியா
நண்பரிடம் 1.5 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்தது தொடர்பிலான 58 குற்றச்சாட்டுகளை மறுத்து இளங்கோ விசாரணை கோரியுள்ளார்
சுங்கைப்பட்டாணி:
நண்பரிடம் 1.5 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்தது தொடர்பிலான 58 குற்றச்சாட்டுகளை மறுத்து இளங்கோ விசாரணை கோரியுள்ளார்.
தலைநகரில் உள்ள அனைத்துலக பள்ளியின் முன்னாள் ஊழியர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக 58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிரம்பானைச் சேர்ந்த 56 வயதான வி. இளங்கோ மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதிகள் முஹம்மது சயீஃபுல் அக்மல், முகமது அஸ்லான் பாஸ்ரி ஆகியோரின் முன் வாசிக்கப்பட்டது.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார்.
அவர் தனது முன்னாள் பள்ளித் தோழரான 56 வயதான டி. சந்திரராஜனை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அனைத்துலகப் பள்ளியில் அமைப்புகள், உபகரணங்களை நிறுவுவது உட்பட பல்வேறு வசதித் திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் கெடாவைச் சேர்ந்த தொழிலதிபர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி, ஜூலை மாதத்திற்கு இடையில் சுமார் 1.3 மில்லியன் ரிங்கிட்டை வங்கிக் கணக்குகளுக்கு இணையம் வாயிலாக ற்றினார்.
இளங்கோ மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm