நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டாய இடைநிலைப்பள்ளி தொடர்பான சட்டத்திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது 

கோலாலம்பூர்: 

கட்டாய இடைநிலைப்பள்ளி கல்வியில் மாணவர்களை உட்படுத்தும் சட்டமசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது கூடியுள்ள மக்களவை கூட்டத்தில் சட்டத்திருத்தம் குறித்து இரண்டாவது, மூன்றாவது வாசிப்புக்கு உட்படுத்தப்படும் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறினார். 

கட்டாய கல்வியை வலியுறுத்தும் விதமாக 1996 கல்வி சட்டத்தின் உட்பிரிவுகளை மற்றும் வகையில் இரண்டாம் கட்ட சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் 

இடைநிலைக்கல்வி கற்க கட்டாயப்படுத்தும் நடைமுறையானது மாணவர்கள் கல்வி சூழலை எதிர்கொள்ள முடியும். 

இடைநிலைப்பள்ளி கல்விக் கூடங்களில் மாணவர்கள் பதிந்து இருப்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset