நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஆசிரியர்கள் ஆளுமை பெற வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்

பத்துகாஜா:  

பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்ற ஏற்பாட்டில் வெள்ளி விழாவை எட்டியது. இந்த வளர்தமிழ் விழா இவ்வாண்டில் மலாக்காவில் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு பேராக்கில் பத்துகாஜாவில் நடந்தால் அந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக நிதியுதவி வழங்க தயாராக உள்ளதாக இந்நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

அடுத்த பத்தாண்டில் என்ன நடக்கபோகிறது என்று தெரியவில்லை. நாம் இம்மாற்றங்களுக்கு தயாராகவில்லை என்றால் நம் சமூகம் பின் தங்கிவிடும். ஆகையால், கற்றல் கற்பித்தல் விவகாரங்களில் தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார் .

செயற்கை நுண்ணறிவு விவகாரங்களில் நாம் நன்கு கற்ற தேர வேண்டும். அதற்கு நாம் இந்த சவாலை ஏற்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். நம்முடைய கலை கலாச்சாரம் மொழி வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வெற்றி காண முடியும். ஆகையால், நம் சமூகத்தினர் காலத்திற்கு ஏற்ற சவாலை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.

May be an image of 10 people, people smiling, violin, flute, dais and text

ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைப்பாட்டை நாம் நன்கு புரிந்து அறிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக அதிக தகவல், சிந்தனைகளை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். ஆகவே, இத்தகைய நவீன வளர்ச்சிக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் கற்று தேர்வது அவசியமாகும். இதன் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்நடவடிக்கைகளுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக, "லிங் டின்" கணக்கு குறிப்பை நாம் அனைவரும் வைத்திருக்க வேண்டும். இதன் வாயிலாக நம்முடைய சுயசரிதையை இதில் இடம் பெற முடியும். இதன் வாயிலாக பல சிறந்த பட்டதாரிகளுடன் தொடர்பெகள் வரையறுக்கப்படும்.

இம்முறை பேச்சுப்போட்டி, திருக் குறள் மனனப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் நடைபெற்றது. இப் போட்டிகளில் வெற்றுப்பெற்றவர்கள் மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய அளவில் மலாக்காவில் நடைபெறும் போட்டிக்கு செல்வார்கள். இம்முறை முதலிடத்தில் கோலகங்சார் மாவட்டத்தில் ம் வென்றது.இரண்டாவது முவாலீம் மாவட்டம்,  மூன்றாவதாக லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் வென்றது.

ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset