நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறையின் தலைமை நீதிபதி பதவி நியமனம்: மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் 

கோலாலம்பூர்: 

நீதித்துறையின் புதிய தலைமை நீதிபதியாக டத்தோ வான் அஹ்மத் ஃபரிட் வான் சலே தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவி பிரமாணம் நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் சிறப்பாக நடைபெற்றது. 

நீதித்துறையின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு வைபவத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இரு துணைப் பிரதமர்களான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி, டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், சட்டம், கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதே நிகழ்ச்சியில் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டத்தோ அபு பாக்கார் ஜய்ஸ், சபா, சரவாக் தலைமை நீதிபதி டத்தோ அஸிஸா நவாவி ஆகியோருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி 1இன் 122B பிரிவின்  கீழ் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset