நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு நிமிடத்தில் 65 வெளிநாட்டு நாணயங்களை அடையாளம் கண்டு மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் தேவக்‌ஷேன்

சிரம்பான்:

ஒரு நிமிடத்தில் அதிகமான வெளிநாட்டு நாணயங்களை அடையாளம் கண்டு மலேசியா சாதனை புத்தகத்தில் தேவக்‌ஷேன் இடம் பிடித்தார்.

ஆறு வயதான  டி. தேவக்ஷயன் என்ற சிறுவன் ஒரே நிமிடத்தில் பல்வேறு நாடுகளின் 65 நாணயங்களை அடையாளம் கண்டு வரலாற்றைப் படைத்துள்ளார்.

இந்த தனித்துவமான திறனின் அடிப்படையில் அவரின் இந்த சாதனை மலேசியா சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது.

தேவக்ஷயன் ஒரு வயதிலிருந்தே மலேசியக் கொடியை அடையாளம் கண்டு உச்சரிக்கத் தொடங்கியதிலிருந்து தேசியக் கொடியில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அவர் சிறு வயதிலிருந்தே, அவரது அசாதாரண திறன்கள் தெளிவாகத் தெரிந்தன.  படங்கள் அல்லது கொடிகளைக் காட்டும்போது, அவருக்கு விரைவில் நினைவு வந்தது.

இதன் அடிப்படையில் அங்கிருந்து நாங்கள் அவருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினோம்.

இரண்டு வயதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளையும் நகரங்களையும் அடையாளம் கண்டு சாதனை படைத்தார் என்று நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அவரது தாயார் ஜி. தேவமலர் கூறினார்.

அவரது நினைவாற்றல் அசாதாரணமானது. நாம் அவருக்கு எதைக் காட்டினாலும், கொடிகள் மற்றும் வெளிநாட்டு நாணய மதிப்புகளை மட்டுமல்ல, இன்னும் பலவற்றையும் அவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்

மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தின் பிரதிநிதி வி. மேனகா, தேவக்‌ஷேனுக்கு அளித்த அங்கீகாரத்திற்கான பாராட்டுச் சான்றிதழை நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset