நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சியினரின் பேரணி பிரதமரின் பதவியைப் பாதிக்கவில்லை: ஃபஹ்மி

ஆயர்குரோ:

எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணி பிரதமரின் பதவியைப் பாதிக்கவில்லை.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

தலைநகரில் நேற்று எதிர்க்கட்சியினர் நட்ச்த்திய பேரணியில் சுமார் 18,000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பதவியைப் பாதிக்கவில்லை.

மலேசியாவில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட பல வழிகளில் தவிர,

தெருப் பேரணிகள் ஒரு பிரதமரை வீழ்த்த முடியாது.

அதனால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் பிரதமராக இருக்கிறார்.

ஏனென்றால் நீங்கள் ஒரு பிரதமரை வீழ்த்த விரும்பினால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதுதான் சரியான வழி.

கடந்த ஜூலை 21 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள் என்று பிரதமர் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தார்.

ஆனால் இன்று வரை, ஒரு வாரம் கழித்து, யாரும் தீர்மானத்தைக் கொண்டு வர துணியவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset