
செய்திகள் மலேசியா
பெண் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு 10,000 பெண் தொழில் முனைவர்களை உருவாக்கும்: ஹேமலா
பட்டர்வொர்த்:
பெண் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட 10,000 பெண் தொழில் முனைவர்களை உருவாக்கும்.
மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா ஏபி சிவம் கூறினார்.
அமானா இக்தியார் மலேசியாவின் பெண் திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் பட்டர்வொர்த் தெ லைட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விளக்கக் கூட்டத்தில் பெண் வர்த்தகர்கள், சமூகத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள் வணிக பங்குதாரர்கள் என 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
மலேசியா முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட இந்திய பெண் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் நோக்கில் இத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த மைல்கல்லுக்குப் பின்னால் உந்து சக்தியாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளார்.
அவரது தொலைநோக்குப் பார்வை, உள்ளடக்கிய நிதியுதவிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக அமானா இக்தியார் நிர்வாக இயக்குனர் டத்தோ ஷமிர் அஜிஸுடன் சேர்ந்து, இந்த நிகழ்வு ஒத்துழைப்பின் சக்தியை வலுப்படுத்தியது.
பெண்கள் வர்த்தகத்தில் செழிக்க இந்நிதி பெரும் பயனாக இருக்கும்.
மேலும் ஒரு தொழில்முனைவோராக அனைவரையும் உள்ளடக்கிய, அதிகாரம் பெற்ற சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வலுவான நடவடிக்கையைக் காண முடிகிறது.
ஆக ஒவ்வொரு பெண்ணையும் உயர்த்தும் ஒரு மலேசிய மடானியை வடிவமைப்பதையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று ஹேமலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am
மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
July 27, 2025, 10:50 am