நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

களும்பாங் ஸ்ரீ மகா சிவசக்தி மாரியம்மன் ஆலய நிலம் உட்பட் அனைத்து விவகாரங்களுக்கும் மஹிமா துணை நிற்கும்: டத்தோ சிவக்குமார்

உலுசிலாங்கூர்:

களும்பாங் ஸ்ரீ மகா சிவசக்தி மாரியம்மன் ஆலய நிலம் உட்பட் அனைத்து விவகாரங்களுக்கும் மஹிமா துணை நிற்கும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

இவ்வாலயம் தற்போது ஜேகேஆர் நிலத்தில் அமைந்துள்ளது. இது ஆலயத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும்.

எது எப்படி இருந்தாலும் பாரம்பரியமான இவ்வாலயம் காக்கப்பட வேண்டும்.

அதற்கான உதவிகளை குறிப்பாக இவ்வாயத்திற்கு மஹிமா எப்போதும் துணை நிற்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக உலு சிலாங்கூரில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டேன்.

ஆலயத் தலைவர்  தங்கராஜாவின் அன்பான அழைப்பின் பேரில் இங்கு வந்தேன்.

வலுவான சமய மரபுகளைப் பேணுவதிலும் இவ்வாலய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக இலவச சிலம்ப வகுப்புகள், சமய வகுப்பு, தேவாரம், சமூகத்தில்ஆன்மீகப் பங்கை ஊக்குவித்தல் உட்பட பல  அர்த்தமுள்ள திட்டங்களை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் அதிகமான பக்தர்கள் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கான  முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.

அதே வேளையில்  மஹிமாவின் உறுப்பினர் சான்றிதழ் ஆலய தலைவரிடம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் களும்பாங் ஸ்ரீ மகா சிவசக்தி மாரியம்மன் ஆலயத்தை மஹிமா வலையமைப்பில் அதிகாரப்பூர்வமாக வரவேற்கிறேன்.

இது மலேசியா முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்கு இடையிலான ஒற்றுமை, ஒத்துழைப்பைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset