
செய்திகள் மலேசியா
குத்தகை துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கம் பாராபட்சம் பார்க்க கூடாது: ஆனந்தன்
செலயாங்:
குத்தகை தொழில் துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கம் பாராபட்சம் பார்க்க கூடாது.
மலேசியா இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன் இதனை கூறினார்.
சங்கத்தின் ஆண்டு கூட்டம் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.
குறிப்பாக குத்தகை துறையில் நிலவி வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பல குறைகளை வெளிப்படுத்தினர்.
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை என்பது நீண்ட கால சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு வேண்டும் என அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
ஆனால் அதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அரசாங்க குத்தகை வைத்திருந்தால் அவர்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்படுகிறது.
அப்படி அதுபோன்ற குத்தகை இல்லாதவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் வழங்கப்படுவதில்லை.
இது குத்தகை துறையில் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது.
குறிப்பாக அரசாங்கம் ஏன் இந்த விவகாரத்தில் பாராபட்சம் பார்க்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.
மலேசிய சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் நாங்களும் தொழில்களை மேற்கொள்கிறோம்.
குறிப்பாக அரசாங்கத்தின் அனைத்து வரிகளையும் நாங்கள் முறையாக செலுத்துகிறோம்.
ஆனால் இந்த அந்நியத் தொழிலாளர் விவாகரத்தில் மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
ஆகவே இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 8:23 pm
தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்
July 27, 2025, 6:39 pm
மலாக்காவில் கால்பதித்த மஹிமாவிற்கு ஆலய நிர்வாகங்கள் மகத்தான ஆதரவை தந்தன: டத்தோ சிவக்குமார்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am