நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்

குவாந்தான்:

கால்பந்துத் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்.

பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீனின் 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் இந்த டத்தோ விருதை பெற்றார்.

மலேசிய கால்பந்து சங்கத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினரான கிறிஸ்டபர் ராஜ்க்கு வழங்கப்பட்ட இந்த விருது,

ஊடகம், தகவல் தொடர்பு, நிகழ்வு மேலாண்மை விளையாட்டு நிர்வாகம் ஆகிய துறைகளில் அவரின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.

கிறிஸ்டபர் ராஜ் பிபா, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவற்றில் ஊடக ஆலோசகராக முக்கியப் பங்கை வகித்துள்ளார்.

இதன் மூலம் பல்வேறு சர்வதேச போட்டிகளில் அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கிண்ணம், கட்டாரில் நடந்த 2022 பதிப்பு போன்ற மதிப்புமிக்க போட்டிகளில் ஊடக அதிகாரியாக அவர் பணியாற்றி உள்ளார்.

மேலும் 2017இல் இந்தியாவில் நடந்த பிபா 17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணம், 2023ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த 17 வயது உலகக் கிண்ண இறுதிப் போட்டி, கட்டாரில் நடந்த 2023 ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset