
செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வியாத்திரை; ஆகஸ்ட் 3ஆம் தேதி பத்துமலையில் நடைபெறும்: சுரேன் கந்தா
பிரிக்பீல்ட்ஸ்:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வியாத்திரை ஆகஸ்ட் 3ஆம் தேதி பத்துமலையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
1982ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஶ்ரீ முருகன் நிலையம் இது வரையிலும் 30,000க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாகக் காரணமாக இருந்துள்ளது.
இந்த நாட்டில் இந்தியர்கள் கல்வி மூலமாகவே முன்னேறி வெற்றியடைய முடியும்.
இதற்கான உந்துசக்தியும் தன்முனைப்பும் நமது சமயம், இந்திய பாரம்பரியத்தில் உள்ளது.
நமது இந்து சமயமும், பாரம்பரியமும் மனிதனை நிலையான வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியது.
அந்த வெற்றியை அடைவதற்க்கான ஞான ஒளியை கொண்டுள்ள நமது இந்து சமய, கலாச்சார, பாரம்பரிய இரகசியத்தை கடந்த 42 ஆண்டுகளாக ஶ்ரீ முருகன் நிலையம் உயர்பித்து அதனை வெற்றிக்கான தன்முனைப்பாக நிலைநிறுத்தி வருகிறது.
அதே வேளையில் இந்த சாதனைக்கு கல்வியுடன் கூடிய சமயமும் முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி விரதம், யாத்திரை மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் தான் 31ஆவது ஆண்டாக கல்வியாத்திரை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது என்று சுரேன் கந்தா கூறினார்.
முன்னதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் நடைபெறவுள்ளது.
இந்த யாத்திரைக்கான ஒரு வாரம் பயணம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
குறிப்பாக இன்று அனைத்து மாணவர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.
அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு கல்வி விரதம் இருக்கவுள்ளனர்.
ஆகவே அடுத்த வாரம் நடைபெறும் கல்வி யாத்திரையில் ஸ்ரீ முருகன் மாணவர்களை தவிர்த்து வெளியில் உள்ள மாணவர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 6:39 pm
மலாக்காவில் கால்பதித்த மஹிமாவிற்கு ஆலய நிர்வாகங்கள் மகத்தான ஆதரவை தந்தன: டத்தோ சிவக்குமார்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am
மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
July 27, 2025, 10:50 am