
செய்திகள் மலேசியா
இந்தியர்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்ற மாய சிந்தனையில் அரசு இருக்கக் கூடாது: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
இந்தியர்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்ற மாய சிந்தனையில் அரசு இருக்கக் கூடாது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக நேற்று தலைநகரில் பேரணி நடத்தப்பட்டது.
டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்பது அப்பேரணியில் கலந்து கொண்டவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த பேரணியில் அதிகமான இந்தியர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மை தான்.
அதற்காக மலேசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அரசாங்கம் நினைத்துக் கொள்ளக் கூடாது.
மேலும் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் வலுவான ஆதரவு உள்ளது என்றும் அரசு நினைத்து கொள்ளக் கூடாது.
இவை எல்லாம் ஒரு மாய சிந்தனையாகும்.
இதுபோன்ற சிந்தனையில் இருந்த அரசாங்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆகவே இந்த விவகாரத்தில் அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தாப்பாவில் நடந்த தாப்பா கூ சயாங் அகப்பக்கம் அறிமுகம் விழாவிற்கு பின் டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 8:23 pm
தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்
July 27, 2025, 6:39 pm
மலாக்காவில் கால்பதித்த மஹிமாவிற்கு ஆலய நிர்வாகங்கள் மகத்தான ஆதரவை தந்தன: டத்தோ சிவக்குமார்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am