
செய்திகள் மலேசியா
அன்வார் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் புனித குரலாக உள்ளது: டான்ஸ்ரீ மொஹைதின்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் புனித குரலாக உள்ளது.
தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
தலைநகரில் நேற்று நடைபெற்ற துருன் அன்வார் பேரணியைத் தொடர்ந்து,
மக்கள் விருப்பத்தை ஏற்று டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கேட்டுக் கொண்டார்.
மக்களின் குரல் ஒரு புனிதமான குரல் என்று நீங்கள் முன்பு சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.
இப்போது மக்களின் புனிதமான குரல் உங்கள் செவிகளில் எதிரொலிக்கிறது.
மக்களின் குரலைக் கவனமாகக் கேளுங்கள். மக்கள் உங்களை பதவி விலக சொல்கிறார்கள்.
மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம். மக்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளாதீர்கள்.
மக்களின் குரலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am