நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்தியர் நகை வணிகர்கள், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தேர்வு

சுபாங்:

மலேசிய இந்தியர் நகை வணிகர்கள், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் ஆண்டுப் பேராளர் மாநாடு இன்று சுபாங் டோர்செட் தங்கு விடுதியில் நடைபெற்றது.

இதில் 2025-2027 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்தியர் நகைவணிகர்கள், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தி வந்த டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் பின் அப்துல் ரசாக் மீண்டும் தலைவராக பேராளர்கள் முன் பொழிந்தனர்.

அந்த வகையில் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தின் துணைத் தலைவராக சண்முகராசு தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் செயலாளராக வீரபாலன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைச் செயலாளராக டத்தின்ஸ்ரீ டாக்டர் எஸ். யுகேஸ்வரி தேர்வு தேர்வானார்.

பொருளாளராக மனோகரன் மீண்டும் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.

முன்பு உதவித் தலைவராக இருந்த டத்தோ இப்ராஹிம் தற்போது நிர்வாக மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் நிர்வாக மன்ற உறுப்பினராக டத்தோ யூவபாலன், புஷ்பநாதன், மகேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset