
செய்திகள் கலைகள்
ஜோ லோ-வை மையப்படுத்தி உருவாகும் குறுந்தொடர்: மிச்சல் இயோ தயாரிக்கிறார்
கோலாலம்பூர்:
1எம்டிபி முறைகேட்டின் மையப் புள்ளி எனக் கருதப்படும் நிதியாளர் ஜோ லோ-வை மையமாக வைத்து குறுந்தொடர் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. பிரபல நடிகை மிச்சல் இயோ Michelle Yeoh, இத் தொடரைத் தயாரிக்க உள்ளார்.
மலேசியாவில் மட்டுமல்லாமல் இண்டர்போல் அமைப்பாலும் தேடப்படுகிறார் ஜோ லோ. அவருக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், டாம் ரைட் மற்றும் பிராட்லி ஹோப் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் எழுதியுள்ள “Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து குறுந்தொடர் உருவாக்கப்பட உள்ளது.
மிச்சல் இயோவுடன் இணைந்து எஸ்கே குளோபல் நிறுவனமும் இத்தொடரை தயாரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே “Crazy Rich Asians” என்ற திரைப்படத்தின் தயாரிப்பில் பங்கேற்றிருந்தது. அந்தப் படத்தில் மிச்சல் இயோவும் நடித்திருந்தார்.
"இந்தக் கதையும் குறுந்தொடரும் ஆசியாவிலும், உலகளவிலும் எத்தகைய கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வது கடினம். அதேவேளையில் சமூக நையாண்டியும் எதிர்மறை நகைச்சுவையும் (darkly comedic) கொண்ட படைப்பாக இருக்கும்," என தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm