நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

லண்டன்: 

இந்தியா - பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மோடி  முன்னிலையில்  இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள், விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதன் மூலம் பிரிட்டனின் 6 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை தொடங்க உள்ளன.

பிரிட்டனில் இந்திய வேளாண் விளை பொருட்கள், உணவு வகைகள், ஜவுளி ரகங்கள், காலணிகள், நகைகள், வைரங்கள், கடல் உணவுகளும், இதேபோல் இந்தியாவில் இங்கிலாந்தின் மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset