நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு விநியோகிப்பாளருக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதில் தாமதமா? ஜாக்கிம் மறுப்பு

கோலாலம்பூர்:

செராஸில் உள்ள  Canselor Tuanku Muhriz மருத்துவமனை, HCTM-யில் செயல்படும் உணவு விநியோகிப்பாளருக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்று இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாக்கிம் தெரிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழைப் பெற விரும்பும் உணவு விநியோகிப்பு நிறுவனத்தின் தரப்பினர் தவறான புரிதலின் அடிப்படையில் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று ஜாக்கிம் இயக்குநர் ஜெனரல் சிராஜுடின் சுஹைமி கூறினார்.

சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பு நிறுவனம் மருத்துவமனையுடன் மூன்றாண்டு ஒப்பந்தம் உள்ளது.

ஹலால் சான்றிதழ் பெறாத ஒரு நிறுவனத்திற்கு மருத்துவமனை RM25.64 மில்லியன் கேட்டரிங் ஒப்பந்தத்தை வழங்கியது அரசாங்க தணிக்கையில் கண்டறியப்பட்டதை அடுத்து, ஜாக்கிம் மற்றும் HCTM நிர்வாகத்திற்கு இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இது வெளிப்பட்டது.

குறிப்பிடப்பட்ட நபர் ஜாக்கிமின் பிரதிநிதி அல்ல, மாறாக ஹலால் சான்றிதழ் செயல்முறைக்கு உட்பட்ட நிறுவன தரப்பினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது, நிறுவனத்தின் பொறுப்பாளர் மகப்பேறு விடுப்பில் இருந்தார்.

அவருக்குப் பதிலாக ஒரு மாற்று நபர் அவரின் பணிகளைத் தொடர்ந்தார்.

ஹலால் சான்றிதழ் செயல்முறையின் ஒவ்வொரு அம்சமும் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நிறுவப்பட்ட தரநிலைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்வதில் ஜாக்கிம் உறுதியாக இருப்பதாக சிராஜுடின் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset