நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணிக்கு ரயிலில் செல்லுங்கள்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

நாளை மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து பங்கேற்பாளர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயிலில் பயணிக்க போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்துப் பொது போக்குவரத்து சேவைகளும் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியைப் பங்கேற்பாளர்கள் அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேரணி நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வண்ணம் இருக்க கூடாது என்றார் அவர்.

பெரும்பாலான மலேசியர்கள் தங்கள் வார இறுதி திட்டங்களை இடையூறு இல்லாமல் நிறைவேற்றுவதை உறுதிசெய்ய பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset