
செய்திகள் மலேசியா
துன் சம்பந்தனின் வரலாறு, சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் பேச்சுப் போட்டி: செனட்டர் சரஸ்வதி அறிவிப்பு
புத்ராஜெயா:
துன் சம்பந்தனின் வரலாறு, சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் பேச்சுப் போட்டி நடத்தப்படவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.
தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகத்தின் தோற்றுநராக துன் வீதி சம்பந்தன் விளங்கி வருகிறார்.
தோட்ட துண்டாடல்களின் போது நம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
தோட்டங்கள் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இதனால் மக்களிடம் 10 ரிங்கிட்டை வசூல் செய்து பல புரட்சிகளை மேற்கொண்டார்.
கடந்த 1974ஆம் ஆண்டு அவர் வெள்ளையர்களிடம் இருந்து முதல் தோட்டத்தை கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட்டுக்கு அவர் வாங்கினார்.
தற்போது நாட்டில் உள்ள 15,000 கூட்டுறவுக் கழகங்களில் முதல் 5 இடங்களில் தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகம் உள்ளது.
இந்த வெற்றிக்கு துன் சம்பந்தனின் போட்ட அடித்தளம் தான் முக்கிய காரணம்.
மேலும் மஇகா தேசியத் தலைவர், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் உட்பட பல பதவிகளில் பல சேவைகளையும் செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் தாம் அவரை வரலாறு, சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்க இப்போட்டி நடத்தப்படுகிறது.
தமிழில் நடைபெறும் இப்போட்டி மலாயா பல்கலைக்கழகம், உப்சி, யூஎஸ்எம், பகாங் மலேசிய பல்கலைக்கழம் ஆகியவற்றில் இப்போட்டின் நடத்தப்படும்.
பல்கலைக்கழக மாணவர்களை தவிர்த்து 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இறுதிப் போட்டி நவம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்று செனட்டர் சரஸ்வதி கூறினார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு, பழஞ்சுவடி காப்பகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகம் இப்போட்டியை முன்னெடுக்க உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் போட்டியாளருக்கு 3,000 ரிங்கிட், கிண்ணம், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இரண்டாவது இடத்திற்கு 2,000 ரிங்கிட்டும் மூன்றாவது இடத்திற்கு 1,000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதை தவிர்த்து 7 பேருக்கு ஆறுதல் பரிசாக 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று கூட்டுறவுக் கழகத்தின் நிர்வாகி பன்னீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm