
செய்திகள் மலேசியா
பேரணி நடத்தும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை மதிக்கிறது; டத்தாரான் மெர்டேக்காவில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குங்கள்
கோலாலம்பூர்:
நாட்டு மக்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை பெரிதும் மதிக்கிறது.
பேரணி நடத்துவது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகும். அதோடு ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது என்று அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் இஸ்மாயில் கூறினார்.
நாளை சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் அன்வார் எதிர்ப்பு பேரணியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
பேரணியில் ஈடுபடும் பொதுமக்கள் தங்களின் பயணங்களை முறையாக திட்டமிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாளை ஜூலை 26ஆம் தேதி எதிர்கட்சிகள் இணைந்து பிரதமர் அன்வாருக்கு எதிராக அன்வார் எதிர்ப்பு பேரணியை தலைநகரில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm