நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணியை முன்னிட்டு ரயில் சேவைகள் நிறுத்தப்படவில்லை: கேடிஎம்பி தகவல்

பெட்டாலிங் ஜெயா:

நாளை நடைபெறவுள்ள பேரணியை முன்னிட்டு பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் ரயில் நிலையங்கள் மூடப்படாது என்று கேடிஎம்பி ரயில் நிறுவனம் உறுதிப்படுத்தியது. 

சமூக ஊடகங்களில் வைரலான அறிவிப்பைத் தொடர்ந்து பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடுவதற்கான எந்த உத்தரவையும் தனது தரப்பு பிறப்பிக்கவில்லை என கேடிஎம்பி தெரிவித்தது. 

மேலும், அண்மைய நிலவரங்களைக் கேடிஎம்பி தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் தெரிவிக்கும் என கூறியது. 

பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் கேடிஎம் நிலையங்கள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என்ற போலி அறிவிப்பு வைரலானதைத் தொடர்ந்து கேடிஎம்பி விளக்கம் அளித்தது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset