நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 ரிங்கிட் நிதியுதவி, ரோன் 95 ரக பெட்ரோல் விலை குறைப்பு ஆகிய அறிவிப்புகள் பொதுத்தேர்தலுக்கு ஆனது அல்ல: ஷம்சுல் இஸ்கண்டார் அகின் தகவல் 

கோலாலம்பூர்: 

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் நிதியுதவி, ரோன் 95 பெட்ரோல் விலை குறைப்பு ஆகிய அறிவிப்புகள் யாவும் பொதுத்தேர்தலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அல்ல. 

மாறாக, இவையாவும் இயற்கையாகவே நாட்டு மக்களுக்கு வழங்கப்பட கூடிய உதவியாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார் அகின் கூறினார். 

பொதுத்தேர்தல் காரணமாக தான் பிரதமர் அன்வார் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டதாக கூறப்படும் ஆருடங்களையும் ஷம்சூல் முற்றிலுமாக மறுத்தார். 

முன்னதாக கடந்த புதன்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நாட்டு மக்களுக்கு மாபெரும் அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில், 18 வயதைக் கடந்த மலேசியர்களுக்கு ONE OFF அடிப்படையில் 100 ரிங்கிட் SARA உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும், செப்டம்பர் 15ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ரோன் 95 ரக பெட்ரோல் விலை 1.99 காசாக குறைக்கப்படுவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset